Thursday, September 8, 2011

முன்னாள் புலி உறுப்பினர்களில் 1000 பேர் மாத இறுதியில் விடுதலையாகின்றனர்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களில் 1000 பேர் இந்த மாத இறுதிக்குள் மீண்டும் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள் 20 வயதுக்கு குறைந்தவர்கள் என்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் காரியாலயம் அறிவித்துள்ளதாக லங்கா சி நிவ்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

யுத்தத்தின் இறுதி காலக்கட்டத்தில் கைது செய்யபட்ட 11700 புலி உறுப்பினர்களில் 7969 பேர் இதுவரை புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் 2879 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இப்போது புனர்வாழ்வு அளிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் தொழில் பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பதாகவும், அது முடிவடைந்நததும் அவர்க்ள் சமூகத்துடன் இணைக்கப்படுவார்கள் என்றும், இந்த வருடம் புனர்வாழ்வுக்காக 750 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த இணையத்தளம் மேலும் தெரிவிக்கிறது.

விடுதலை செய்யப்படுபவர்களுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத் திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும்,இதற்காக தனியார் நிறுவனங்கள் பல விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் காரியாலயம் அறிவித்துள்ளதாக அந்த இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment