Saturday, September 3, 2011

10 ஆயிரம் சிறைக்கைதிகளுக்கு தொழில் பயிற்சி- இளைஞர் அபிவிருத்தி அமைச்சு.

தொழிநுட்பம் மற்றும் தொழில் பயிற்சி திணைக்களம், இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன 10 ஆயிரம் சிறைக்கைதிகளுக்கு தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கு இளைஞர் விவகாரத்திறன் அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் முதற்கட்டமாக போகம்பரை சிறைச்சாலையில் உள்ள மூவாயிரம் கைதிகளுக்கு தொழில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இதற்கமைய சிறைக் கைதிகளுக்கு கட்டிட நிர்மாணம், தச்சுவேலை, தையல், வாகனம் திருத்துதல் மற்றும் அழகுக்கலை ஆகிய துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் விடுதலையாகும் போது அவர்கள் இலகுவாக தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக இளைஞர் விவகாரம் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு தெரிவிக்கின்றது.

இதேவேளை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைப்பதற்கு பதிலாக மாற்று நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரீஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது அநேகமான சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுகின்றனர். இதன் காரணமாக சிறைச்சாலைகளுக்குள் அநாவசியமான முறையில் நெருக்கடி ஏற்படுவதாக முன்னாள் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments:

Post a Comment