யாழ் நகரில் ஒரு இரவில் 10 கடைகளில் கொள்ளை. கிழக்கில் 15 பேர் கைது
யாழ் நகர பகுதியில் ஒரே இரவில் பத்து வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு பத்து இலட்சம் ரூபா பொறுமதியான பொருட்களும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஞாயிறு இரவு இடம்பெற்றுள்ளது. யாழ் நகரின் ஸ்ரான்லி வீதி மணிக்கூட்டு வீதி மற்றும் நகர்ப் பகுதி கடைகளில் கொள்ளையர்கள் குழு ஒன்று வர்த்தக நிலையம்களின் பிரதான வாசல் கதவுகளை உடைத்து அங்கிருந்த தொலைபேசிகளையும் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளது. நேற்று காலை வழக்கம் போல் வர்த்தக நிலையத்தை திறக்க வந்தபோது தமது கடைஉடைக்கப்பட்டு 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணமும் புதிய வகை கைத்தொலைபேசியும் களவாடப்பட்டிருந்ததாக வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஸ்ரான்லி வீதி நாக விகாரைக்கு அருகிலுள்ள மருந்து விற்பனை நிலைய உரிமையாளர் இச்சம்பவம் தொடர்பாக தெரிவிக்கையில் வழமையான நேரத்திற்கு வந்து கடையை திறக்க முற்படுகையில் கடையின் பூட்டுக்களையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றதுடன் அனைத்து மருந்துப்பொருட்களையும் கிண்டி கிளறி சென்றுள்ளனர். நான் பணத்தை வைத்துவிட்டு செல்வதில்லை அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் மட்டக்களப்பு புற நகர் பிரதேசம்களில் இடம்பெற்றுவரும் கொள்ளைச்சம்பவம்கள் தொடர்பில் இதுவரை சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு பிரதேசம்களிலுள்ள வீடுகள் வர்த்தக நிலையங்களுக்குள் நுளையும் இவர்கள் நகை மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்துக்கொண்டு தலைமறைவாகிவருகின்றனா. இதனால் இப்பிரதேச மக்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்ல முடியாதுள்ளனர். இக்கொள்ளை சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் மட்டக்களப்பு பொலிசார் இதுவரை 15 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதற்கிணங்க இவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தன்டனையும் வழங்கப்பட்டுள்ளது இக்கொள்ளைச் சம்பவம்களுடன் தொடர்புடைய பலரை பொலிசார் தேடி வருகின்றனர்
0 comments :
Post a Comment