ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய யாப்புக்கு எதிராக செயற்படுகின்ற எந்தவொரு நபர் மீதும் தயவு தாட்சன்யம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் இதற்கான தீர்மானம் நேற்று முன்தினம் இடம்பெற்ற செயற்குழு அமர்வில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கட்சிக்கு எதிராக விமர்சனம்களை முன்வைத்தல் குழுவாக பிரிந்து செயற்படுதல் வௌ;வேறு இடங்களில் ஊடக மாநாடுகளை நடாத்துதல் மற்றும் செயற்குழு தொடர்பில் அவதூறான கருத்துக்களை வெளிப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் நிமித்தம் புதிய யாப்பின் எட்டாம் ஒன்பதாம் சரத்துக்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அக்கட்சி அறிவித்தது.
செயற்குழுவில் சர்ச்சைகளும் எதிர்பாராத மாற்றங்களும் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அனைத்தும் சுமுகமாகவே நிறைவு பெற்றுள்ளன.
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல்களில் எவ்வாறு கட்சியை வெற்றி பெறச்செய்வது என்பது தொடர்பிலும் அதேநேரம் அனைத்து தரப்பினரும் ஒண்றிணைந்து செயற்படுவது குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும், கடந்த கால சம்பவங்கள், விமர்சனங்கள் அனைத்தும் நேற்றைய செயற்குழுவுடன் மறக்கப்பட்டிருப்பதாகவும் அக்கட்சி குறிப்பிட்டது.
இதேவேளை செயற்குழு கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறுகையில், செயற்குழு கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் இடம் பெற்றன. கட்சியை
வெற்றிப்பாதையில் இட்டுச்செல்வதற்கான பலதரப்பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் கட்சியிலிருந்து எவரையும் ஓரம் கட்டி விடுவது எமது நோக்கமல்ல. அனைவரும் ஒன்றிணைந்த கட்சியாகவே முன்செல்வதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.
பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனநாயக மீது ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்வதற்கு செயற்குழ தீர்மானித்திருக்கின்றது. அது செயற்குழவின் தீர்மானமாகும். ஏது எவ்வாறிருப்பினும் உண்மை வெற்றிபெறும் என்பதை இங்கு கூறிக்கொள்கிறேன்.
ஐ.தே.க செயற்குழுவில் சஜித் இணைந்து செயற்படவேண்டுமென ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
..
No comments:
Post a Comment