Wednesday, August 24, 2011

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் முன் பிணை மனு கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு

சிரேஷ்டபொலிஸ் அதிகாரி ஒருவருடைய வீட்டில் இருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும்,பணம், என்பவற்றை திருடிய சம்பவம் தொடர்பாக, நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யபட்ட தம்பதியினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட நகை ,பணம், என்பவற்றில் ஒரு பகுதியை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பாக தேடப்பட்டு வரும் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் சார்பில் முன்வைக்கப்பட்ட முன் பிணை மனுவை நீர்கொழும்பு மேலதிக நீதவான் நிராகரித்தார்.

இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மிரிஹானை விஷேட குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த சொயிசா முன் பிணை வழங்குவதற்கு மீண்டும் ஆட்சேபம் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்த வழக்கின் பிரதான சந்தேக நபர் எனவும்.பிணை வழங்கப்பட்டால் சாட்சிகளுக்கு இவர் ஏதும் அழுத்தம் கொடுக்கலாம் எனவும் பொலிஸ் தலைமையகத்திற்கும் இவர் தொடர்பாக பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும்.இது தொடர்பாக விசாரணை செய்ய வேண்டியிருப்பதன் காரணமாவும் சுட்டிக்காட்டி முன்பிணை வழங்குவதற்கு பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த சொயிசா ஆட்சேபம் தெரிவித்தார்.

இதனை அடுத்து நீர்கொழும்பு மேலதிக நீதவான் முன் பிணை மனு கோரிக்கையை நிராகரித்தார். நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் சார்பில் இரண்டாவது தடவையாக முன் பிணை கோரப்பட்டு நிராகரிக்கப்பட்டமை குறுப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment