Tuesday, August 23, 2011

இலங்கை விவகாரம் வேண்டாம், ஊழல் தொடர்பில் பேசுவோம் மக்களவையில் அமளிதுமளி

இலங்கை தமிழர்கள் தொடர்பில் இன்றைய தினம் இந்திய மக்களவையில் நடைபெறவிருந்த விவாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய அமர்வின் ஆரம்பத்தில், டி.ஆர். பாலு இலங்கை தமிழர் தொடர்பிலான தமது விவாதத்தை ஆரம்பித்தார்.

எனினும் சபையில் இருந்த எதிர்கட்சியினர், ஊழல் விவகாரங்கள் குறித்து விவாதத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கோசமெழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து, மக்களவையின் அமர்வினை இரண்டு மணித்தியாலங்களுக்கு ஒத்தி வைப்பதாக சபாநாயகர் மீராகுமாரி அறிவித்தார்.

1 comment:

  1. They've bundle of vitally important things to
    do in their own country.It's crystal clear and completely obvious.Sometimes foreign medias bring everything to the outer world Great saint Ramakrishnar once said "be perfect and genuine the world will automatically change itself"

    ReplyDelete