Monday, August 29, 2011

பட்டாசு தயாரிக்கும் பொற்றாசியம் நைட்ரேட் தட்டுப்பாடு தொடர்பாக கலந்துரையாடல்

நீர்கொழும்பு- கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோர் பட்டாசு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொற்றாசியம் நைட்ரேட் மூலப் பொருள் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட இன்று காலை தயாராகியிருந்தனர்.

பொற்றாசியம் நைட்ரேட் மூலப் பொருள் தட்டுப்பாடு காரணமாக பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளமைக்கும், பொற்றாசியம் நைட்ரேட் மூலப் பொருளை இறக்குமதி செய்ய முடியாவிடில் அதனை தனியாருக்கும் இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு கோரியும் அவரர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட இருந்தனர்.

இதனை அடுத்து இது தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று முற்பகல் கிம்புலாபிட்டிய மெதலங்கார விகாரையில் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தலைமையில் இடம் பெற்றது. இக் கலந்துரையாடலில் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் உட்பட பொற்றாசியம் நைட்ரேட் மூலப் பொருளை இறக்குமதி செய்யும் கூட்டுத்தாபனத்தின் அதிகாரி ஒருவரும் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.

இஸ்ரேலில் இருந்தே பொற்றாசியம் நைட்ரேட் மூலப் பொருள் முன்னர் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தற்போது அந்த நிறுவனம் மூடப்பட்டு விட்டதாகவும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொற்றாசியம் நைட்ரேட் தரம் வாய்ந்ததாக இல்லாதிருந்ததாகவும் இதன் காரணமாகவே தற்போது தட்டுப்பாடு பொற்றாசியம் நைட்ரேட் மூலப் பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னதாக இந்தியாவிலிருந்து தரமான பொற்றாசியம் நைட்ரேட் இறக்குமதி செய்யப்பட்டு வழங்கப்படும் என்றும் அதிகாரிகளால் அங்கு எடுத்துக் கூறப்பட்டது.

No comments:

Post a Comment