Wednesday, August 31, 2011

அவுஸ்திரேலியா - மலேசியா உடன்படிக்கை சட்டவிரோதமானது - உயர் நீதிமன்றம்.

அவுஸ்திரேலியா செல்லும் அகதிகளை, மலேசியாவுக்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக அவுஸ்திரேலியா - மலேசியா அரசாங்கங்களுக்கிடையில் கைச்சாத்தான உடன்படிக்கை சட்டவிரோதமானது என அவுஸ் திரேலிய நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முதல்கட்டமாக 800 அகதிகளை அவுஸ்திரேலியாவில் இருந்து மலேசியாவுக்கு மாற்றவும் அதற்கு பதிலாக, நான்கு வருடங்களின் பின்னர் 4000 அகதிகளை மலேசியாவில் இருந்து மீளப்பெறவும் அவுஸ்திரேலியா - மலேசியா அரசாங்கங்களுக்கிடையில் கைச்சாத்தான உடன்படிக்கை உடன்படிக்கையில் இணங்கிக்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் இந்த திட்டத்தை நிராகரித்துள்ளது.

மலேசியாவின் சட்ட முறைமையில்,அகதிகளுக்கு போதிய பாதுகாப்பு காணப்படவில்லை. என்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து அனுப்பப்டும் அகதிகளை, சிக்கலில் தள்ளுவதாக அமையும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தொடர்பில், தாம் கவலை அடைவதாக அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை எனவும் ஆட்கடத்தலுக்கு எதிராக அவுஸ்திரேலிய மேற்கொண்ட திட்டத்தின் பின்னடைவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com