Saturday, August 13, 2011

தாக்குதலில் ஈடுபடுவோருக்கு எதிராக பாராபட்சமின்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

மூன்று தசாப்த யுத்தம் முடிவுக்கு வந்து, நாட்டில் அமைதி சூழல் நிலவும் வேளையில், இலங்கை பிரஜைகள் தாம் விரும்பும் எந்நவொரு இடத்திற்கும் சென்று வருவதற்கான உரிமை உள்ளது என்றும் பல்வேறு தேவைகளுக்காக தமது உறவினரகள் நண்பர்களை சந்திப்பதற்காகவும்,தமது வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காகவும் கிராமங்களுக்கு வருபவர்கள் மீது எவ்வித காரணத்தையும் கேட்டறியாது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதென தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்

சட்ட உதவிகளை பெறுவதை விடுத்து,எவ்வித விசாரணையும் இல்லாமல்,இத்தகைய தாக்குதலில் ஈடுபடுவோருக்கு எதிராக பாராபட்சமின்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர்கள் உயிரிழப்பார்களாயின் அது பாரதூரமானது எனவும்,பொது மக்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது எனவும் தெரிவித்த அவர்.கிராம அல்லது தோட்டப்புறங்களுக்கு வருவோர் மீது சந்தேகம் நிலவும் பட்சத்தில் 119 அல்லது 118 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

.............

No comments:

Post a Comment