Monday, August 22, 2011

முஸ்லிம் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலர் சந்திப்பு. பள்ளிவாயல்களுக்கு பாதுகாப்பளிக்க உத்தரவு.

காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற அசம்பாவித சம்பவம் குறித்தும் அதன் போது காத்தான்குடியில் ஏற்பட்ட உடமைகளின் பாதிப்பு குறித்தும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சஅவர்களின் கவனத்திற்கு இன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவரும் சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என்.எம்.அமீன் அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு இதை கொண்டு வந்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை நேற்று மாலை சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் தலைமையிலான அதன் பிரதி நிதிகள் மற்றும் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை பிரதி நிதிகள் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தனர்.

இதன் போதே காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை எற்பட்ட அசம்பா விதம் அதன் போது ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இந்த சந்திப்பில் கிழக்குட்பட புத்தளம் போன்ற பகுதியில் தற்போது மர்ம மனிதன் விவகாரத்தினால் எற்பட்டுள்ள அச்ச நிலை மற்றும் பதற்றம், அசாதாரண சூழ்நிலை, புனித றமழான் இரவு நேர தொழுகைகளுக்கு பள்ளிவாயல்களுக்கு மக்கள் செல்வதில் ஏற்பட்டுள்ள அச்சம் போன்ற விடயங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.

இதையடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இரவு நேர வணக்கங்களுக்காக பள்ளிவாயல்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார்.

இதே போன்று இன்று மாலை மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்தும், புத்தளம், கண்டி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்ட பள்ளிவாயல்கள் சம்மேளன பிரதி நிதிகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்தித்து தற்போதய நிலை குறித்து கலந்துரையாடவுள்ளனர்.

இதற்காக பள்ளிவாயல் சம்மேளன பிரதி நிதிகள் விஷேட ஹொலிகொப்டர் மூலம் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு என்பன ஏற்பாடு செய்து வருகின்றன.


No comments:

Post a Comment