ஹெரோயின் போதைப் பொருள் கடத்தி வந்த பாகிஸ்தான் பிரஜை கைது.
ஹெரோயின் போதைப் பொருளை உருண்டைகளாக உடம்பில் (உட்செலுத்தி) மறைத்து வைத்து இலங்கைக்கு கடத்தி வந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் சந்தேக நபர் ராகமை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு வைத்து சந்தேக நபரின் உடம்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 80 இற்கும் மேற்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் உருண்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபரை நீர் கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment