சிட்ணியில் பெண்களை தவறான கோணத்தில் படமெடுத்த இலங்கையருக்கு தண்டனை.
நூற்றுக்கணக்கான பெண்களை தவறான கோணத்திலிருந்து படம்பிடித்த சிட்னி வாழ் இலங்கையருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 9 மாதங்கள் பிற்போடப்பட்ட சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. சபாபதி சந்திஹாசன் என்ற நபர் சுமார் ஒருவருடத்தில் 1000 புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை எடுத்துள்ளார்.
56 வயதான இவர் நிர்மாணத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். கடந்த பெப்ரவரி மாதம் சிட்னி மத்திய ரயில் நிலையத்தில் இவர் கைது செய்யப்பட்டார்.
தனது கைப்பெட்டியின் மேல் டிஜிட்டல் கமராவை வைத்து பெண்கள் நடந்து செல்லும் பாதையில் இவ்வாறான புகைப்படங்களை எடுத்துள்ளார்.
இவ்வாறு எடுக்கப்பட்ட வீடியோக்களிலும் புகைப்படங்களிலும் ஒருசில பெண்கள் உள்ளாடைகள் அணியாது காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
16 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவிகளும் இந்த வீடியோக் காட்சிகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கு விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்தும் மன அளவில் பாதிக்கப்பட்ட நபர் என்ற ரீதியிலும் பொலிஸாருக்கு சிறந்த முறையில் ஒத்துழப்பு வழங்கினார் என்றும் இவருக்கு பிற்போடப்பட்ட 9 மாத சிறைத்தண்டனை வழங்கி தீர்பளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் காணப்பட்ட உள்நாட்டு பிணக்குகளினால் இவருக்கு மன உலைச்சல் ஏற்பட்டிருப்பதாக இலங்கையர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இலங்கையரது வீட்டினை சோதனை செய்த போது 1.3 ஜீ.பி கணினி பரப்பில் 1100 புபைப்படங்கள் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்துள்ளது.
0 comments :
Post a Comment