Saturday, August 20, 2011

ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு சர்வதேசம் முயற்சி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை கவிழ்த்து தமக்கு தேவையான விதத்தில் ஆட்டுவிக்கும் தலைவர் ஒருவரை ஆட்சி அதிகாரத்தில் அமரச்செய்யவே சர்வதேசம் முயற்சிக்கின்றது என்று பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள சிலர் பொய்யான தகவல்களை வழங்குவதன் காரணமாகவே இவ்வாறு நிகழ்கின்றது என்று கூறினார்.நேற்று கொழும்பில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,சர்வதேசம் எம்மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு தெளிவான பதில்களை வழங்கினோம் எனினும் சர்வதேசம் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறது .இதற்கு அவர்களின் மறைமுகமான நிகழ்ச்சி நிரலும் இங்குள்ள சிலர் வழங்கும் பொய்யான தகவல்களுமேயாகும்.இவ்வாறான செயற்பாடுகளை நம்மவர்கள் கைவிட வேண்டும் .பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தை நாமனைவரும் ஒற்றுமையுடன் முன்னெடுத்தோம் வெற்றி பெற்றோம் ஆனால் வெற்றி பெற்ற பின்பு இன்று பிரிந்து செயற்படுகின்றோம் இது கவலைக்குரிய விடயமாகும் என்று தெரிவித்தார்.



1 comments :

Anonymous ,  August 20, 2011 at 6:46 PM  

It's absolutely correct the resentment of Srilanka,in regard to foreign interference in the internal affairs
of the country.Interfering foreign busybodies are practising this as a usual practise in addition to their daily routine of work.
We wonder why..? Why not they take care of their own countrie's matters.
It would be much useful.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com