Wednesday, August 31, 2011

தமிழக அரசின் தீர்மானம் எவரையும் கட்டுப்படுத்தாது. மத்திய சட்டத்துறை அமைச்சர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்;ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமென்று கோரி தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.

இந்தக் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேருக்கும் செப்டம்பர் 9ம் திகதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது எனினும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற சென்னை மேல் நீதிமன்றம் 8 வாரம் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் அவர்களுக்கு பொது மன்னிப்பு கோரி சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து குர்ஷித் கூறுகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது இதை எவ்வளவு முக்கியமானதாக எடுத்து கொள்ள வேண்டுமோ ,அவ்வளவு முக்கியமானதாக எடுத்துக்கொள்ளப்படும் அவ்வளவுதான்.

அதே நேரத்தில் மேல் நீதிமன்றத்தின் முடிவில் நான் குறுக்கிட முடியாது குடியரசு தலைவரால் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை மட்டுமே நான் இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியும் மேல் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றம்களும் தங்களது கருத்தை தெரிவிக்கலாம். அந்த கருத்து இறுதியாக உறுதிப்படுத்தப்படும் வரை அந்த நீதிமன்றம்களின் கருத்து குறித்து நான் எதுவும் கூறமுடியாது.

சென்னை மேல் நீதிமன்றம் இடைக்கால தீர்ப்புதான் வழங்கியுள்ளது. அதற்கு அரசு உரிய பதிலை அளிக்கும் என்றார்.

No comments:

Post a Comment