கிறீஸ் பூதத்தை கண்டால் மேர்வின் சில்வாவுக்கு அறிவிக்கட்டாம்.
நாட்டில் எங்காவது கிறீஸ் பூதம் காணப்பட்டால் அது தொடர்பாக எனக்கு தொலைபேசி மூலமாக அறியத்தாருங்கள் என்று அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டார். களனி பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் மேற்சொன்னவாறு குறிப்பிட்டார்.
மக்கள் தொடர்பு மக்கள் அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் இது தொடர்பாக எனக்கு பாரிய பொறுப்பு உள்ளது. கிறீஸ் பூதங்களும் எனது மக்கள் அலுவல்கள் அமைச்சின் கீழ் வருகின்றன. கிறீஸ் பூதங்கள் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டால் 0722287210 என்ற எனது தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு எடுத்து அறிவியுங்கள். நடு இரவாக இருந்தாலும் அழைப்புக்கு நான் பதிலளிப்பேன்.
கிறீஸ் பூதம் வந்தால் முதலில் சுற்றிவளையுங்கள், அப்படியே வைத்திருங்கள்.நான் நேரில் வந்து அந்த கிறீஸ் பூதத்தின் முழுக் குடும்பத்தையும் முச்சந்தியில் கட்டி வைப்பேன்.
அன்று எனக்கு சிறைக் கதவுகள் திறக்கப்படும். கிறீஸ் பூதத்திற்கு மயானத்தின் கதவுகள் திறக்கப்படும் என்று அமைச்சர் மேர்வின் சில்வா அங்கு மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment