பிள்ளையான் அரசிலிருந்து விலகி சவால் விடுக்க தயாரா? தென்னிலங்கை ஊடகம்
அரசாங்கத்திற்கு ஆதரவளித்துவரும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படுகின்ற சந்திரகாந்தன் அரசாங்கத்திலிருந்து விலகி ஆட்சிக்கு சவால்விடுக்க தாயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்விடயத்திற்கு ஆசியாவிலுள்ள பிரபலநாடொன்றின் உளவுப்பிரிவு அந்தக்கட்சிக்கு தேவையான உதவிகளை வழங்கிவருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் லங்கா சீ நியுஸ் எனும் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல இடங்களிலும் தோன்றியுள்ள கிறீஸ் பூதம் மற்றும் மர்ம மனிதன் இனிவரும் காலங்களில் எமது எழிச்சியை தொடர்ந்து முடிவுக்கு வந்துவிடும்மென்று குறிப்பிட்டு தமிழீழ புலிகளியக்கம் என்ற பெயரில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பிரதேசங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இப்போது கிழக்கில் தோன்றியிருக்கும் மர்ம மனிதன் தொடர்பான பிரச்சினைக்கு இராணுவத்திற்கும் கடற்படையினருக்கும் தொடர்பிருப்பதாகவும் இதற்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும் என்றும் கடந்தவாரம் கூடிய கிழக்கு மாகாண சபையின் கூட்டத்தில் முதலமைச்சர் கூறியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் மர்ம மனிதர்கள் மூலமாக மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருப்பது அரசாங்கமே, அரசாங்கம் இதை மேற்கொள்வதற்கு ரகசியம் ஒன்று இருக்கிறது, அரசாங்கம் அவசரகாலசட்டத்தை நீக்க பிரேரணை கொண்டுவரவுள்ளது. அவசரகால தொடர்ந்து வைத்திருப்பதற்காகவே மர்ம மனிதர்கள் ஊடாக அரசு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது என்றும் முதலமைச்சர் பிள்ளையான் அங்கு கூறியிருந்தார்.
அவ்வாறாயின் பிள்ளையான் அரசிலிருந்து வெளியேறி அரசிற்கு சவால் விடுக்க தயாரா என அவ்விணையம் கேள்வியெழுப்பியுள்ளது.
0 comments :
Post a Comment