பண மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு சமூக சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
பண மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் பல்வேறு வழிமுறைகள் ஊடாக பொதுமக்களை ஏமாற்றி பணம் மோசடி செய்வதனைத் தடுப்பதற்காக, பாதுகாப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவிக்கிறார்.நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் இவற்றின் மூலம் பல இலட்ச ரூபா பெறுமதியான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவளை இரத்தோட்டை, ஓவல பகுதியில் பெறுமதிமிக்க பளிங்கு கல் ஒன்றை திருடிய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வீதி புனரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இருவருக்கே இந்த பளிங்கு கல் கிடைத்துள்ளதாகவும் இவர்கள் அதனைத் திருடியுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் திருடப்பட்ட பெறுமதி வாய்ந்த பளிங்கு கல் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment