ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தனது கணவர் தொடர்பாக அக்கறை காட்டவில்லையென ஜெனரல் சரத் பொன்சேக்காவின் மனைவி அனோமா பொன்சேக்கா அண்மையில் வெளியிட்ட கருத்து குறித்து ஐக்கிய தேசியக் கட்சியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
சரத் பொன்சேக்காவை விடுதலை செய்துகொள்வதற்காக தானும், தனது வழிகாட்டலின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியினரும் தேசிய, சர்வதேச ரீதியில் பாரிய பணிகளை முன்னெடுத்து வரும் நிலையில், அனோமா பொன்சேக்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை லங்காதீப பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இந்த விடயம் தெரிவித்துள்ள கருத்து குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அதிருப்தியடைந்திருப்பதாக அவரது அலுவலகத்தின் சிரேஷட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளர்.
தனது கணவரின் சுக துக்கங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேட்டறியவில்லை எனவும் அனோமா பொன்சேக்கா தெரிவித்திருந்தார். தனது கணவர் குறித்து ரணில் விக்ரமசிங்க கவலையடையாவிட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள ஒரு சிலரும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜே.வி.பியும் தம்முடன் இருப்பதாகவும் அனொமா பொன்சேக்கா கூறியுள்ளார்.
அவர்கள் தனது கணவரை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் எனவம் இதில் ஜே.வீ,பி பெருமளவு பங்களிப்பை செய்து வருகிறது எனவும் அனோமா பொன்சேக்கா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment