Wednesday, August 24, 2011

காத்தான்குடியில் தூக்கில் தொங்கிய நிலையில் பென்னின் சடலம் மீட்பு...

புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதி பிர்தௌஸ் நகரில் உள்ள வீடொன்றிலிருந்து பெண்ணொருவர் நேற்று காலை 11 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 55 வயதுடைய முகம்மது முஸ்தபா பாத்தும்மா என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் மீட்டக்கப்பட்டவராகும்;.

ஏழு பிள்ளைகளின் தாயான இவர் கடந்த 1990ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட கலவர சூழ்நிலையில் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததோடு, கடந்த சுனாமி அனர்த்தத்தில் தனது உடமைகள் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் மனத்தாக்கத்திற்குள்ளாகி இவர் ஒரு மன நோயாளியாக இருந்தார் மனனோயாளியான இவர் அதற்கான மாத்திரைகள் பாவிப்பது வழமை . அதே போன்று மாத்திரைகளை பாவிக்கும்போது அதிகமாக மாத்திரைகளை உட்கொண்டுவிட்டு இவ்வாறான விடயத்தில் இற ங்கியிருக்கலாம் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இம்மரணம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.. தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

செய்தியாளர்.ஜே.எம்

No comments:

Post a Comment