ஆட்சி அதிகார பலத்தை பயன்படுத்தி கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை கைப்பற்ற அரசாங்கம் முயற்சி செய்வதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. கொழும்பு மாநகரில் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்திரமான நிலையில் இருப்பதை அரசாங்கம் உணர்ந்து கொண்டுள்ளதன் காரணமாகவே இது போன்ற செயற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருவதாக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளதாக லங்கா சி நிவ்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளர் தொடர்பான தீர்மானம் எடுப்பது காலதாமதமாகியுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட் கிழமை இடம்பெறவுள்ள கட்சியின் நிறைவேற்றுக் குழுவின் கூட்டத்தில் இது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன குறிப்பிட்டதாக லங்கா சி நிவ்ஸ் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment