போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டும் என்று இலங்கை அரசு மீது இன்று தாக்குதல் தொடுத்துள்ளவர்கள் இந்திய அமைதிப்படையினால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து ஏன் வாய் திறப்பதில்லை? இவ்வாறு சிங்களத் தேசியவாதியும் சட்டநிபுணருமான கோமின் தயாசிறி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்ப் பொதுமக்கள் இலங்கைப் படையினரால் மட்டுமல்ல இந்தியப் படையினராலும் கொல்லப்பட்டார்கள் என்றே குற்றம்சாட்டப்படுகின்றது. ஆனால், இன்று இலங்கைப் படையினரை பொறுப்புக் கூறுமாறு வலியுறுத்துபவர்கள் இந்திய அமைதிப்படை குறித்து பேசுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். சிறிலங்காப் படைகள் பொறுப்புக்கூற வேண்டுமானால் இந்தியப் படைகளும் பொறுப்புக் கூற வேண்டும் என்று கூறியுள்ள கோமின் தயாசிறி, இந்தியா செய்தவை தவறில்லை என்றால், அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களை மீறியதாக இலங்கை மீது மட்டும் குற்றம்சாட்ட முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
எந்தவொரு நாடும் இந்தியாவுக்கு எதிராக விசாரணை நடத்தக் கோரவில்லை என்று குறிப்பிட்ட கோமின் தயாசிறி, வடக்கு கிழக்கு மனிதஉரிமைகள் செயலகத்தினால் வெளியிடப்பட்ட நூல் ஒன்றில் இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட 12 மோசமான படுகொலைகள் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
The question raised by Mr.Comin Dayasiri is almost reasonable,Will the "Drum up" supporters of any campaigns give an explanation to Mr.Comin Dayasiri's question.
ReplyDelete