சட்டவிரோத கசிப்பு நிலையம் கட்டுநாயக்க பொலிஸாரால் சுற்றிவளைப்பு.
மினுவாங்கொட சினஹிட்டியான பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு தயாரிக்கும் நிலையமொன்றை கட்டுநாயக்க பொலிஸார் சுற்றிவளைத்து ஒருவரை கைது செய்துள்ளதுடன் கசிப்பு கலன்களையும் மீட்டுள்ளளனர். நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது 34 பொலித்தீன் உரைகளில் அடைக்கப்பட்ட 34 கசிப்பு பைகளையும் கசிப்பு நிரப்பப்பட்ட 45 கலன்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட கசிப்பு 1800 போத்தல்களில் அடைக்கக் கூடியது என பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க பொலிஸ் நியை பொறுப்பதிகாரி கமல் கிரிஹெல்லவின் ஆலோசனையின் கீழ் விஷேட பொலிஸ் குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
0 comments :
Post a Comment