த.தே.கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை நிறுத்தப்படவில்லை. அரசாங்கம்.
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தை நிறுத்தப்படவில்லை என்று சுற்றாடல் அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா நேற்று மாலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம் பெற்ற அமைச்சரவ தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் குறிப்பிட்டார்.
இனிவரும் காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை பாராளுமன்ற தெரிவுக் குழுவின் ஊடாக நடைபெறும். அவர்கள் சில நிபந்தனைகளை விடுத்துள்ளனர். அது தொடர்பாக சிந்திக்க வேண்டியுள்ளது. யாரும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியும் எனவும் அமைச்சர் அங்கு குறிப்பிட்டார்.
இது போன்ற பேச்சுவார்த்தை ஊடாக குறுகிய தீர்வுகளை காண முடியாது. பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய இணக்கப்பாடொன்றை பாராளுமன்ற தெரிவுக் குழுவின் மூலமாக பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment