Sunday, August 28, 2011

நான்கு அநாதைச் சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த ஆசாமி கைது.

ஜா-எல பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்ல உரிமையாளர் ஒருவர் அந்த இல்லத்திலிருந்த நான்கு சிறுமியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் ஆஜர் செய்த போது எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் இவோன் பெர்னாந்து உத்தரவிட்டார்.

கந்தானை பிரதேசத்தை சேர்ந்த ரொட்னி பெரேரா என்பவரே விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டவராவார். சந்தேக நபர் ஜா-எல பிரதேசத்தில் 'ஹாவர்ஸ்ட்' என்ற பெயரில் அநாதை சிறுவர்களுக்கான இல்லம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இந்த இல்லத்தில் 21 ஆண் சிறுவர்களும் 10 பெண் சிறுமியர்களும் உள்ளனர். இவர்களில் பெண் சிறுமியர்களில் நால்வரையே சந்தேக நபர் அடிக்கடி பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரி ஒருவர் மன்றில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் தொடர்பாக வைத்திய அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறும் சந்தேக நபரை எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் இவோன் பெர்னாந்து உத்தரவிட்டார்.

1 comment:

  1. It's better to handover the orphanages to the seior ladies or to the women missioneries who
    play an active role in social activities.The happenings at the orphanges are "a curse to the entire nation".

    ReplyDelete