அவசரகால சட்டம் நீக்கப்பட்டாலும், கிடையாது விடுதலை பயங்கரவாதிகளுக்கு. கோத்தா
அவசரகால சட்டத்தை நீககியதன் காரணமாக பயங்கரவாதிகளுக்கு விடுதலை கிடைக்காது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள எல்.ரி.ரி. பயங்கரவாதிகளுக்கு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகள் தொடர்பாக இனிமேலும் மேற்கொள்ளவுள்ள சட்ட நடவடிக்கைகள் மற்றும் தண்டனைகள் தொடர்ந்தும் செயற்படுத்தப்படும். ஜனாதிபதி அவசாகால சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுத்திருப்பது நாட்டு மக்களை கருத்திற் கொண்டேயாகும். இந்த சட்டத்தை நீக்கியதன் மூலமாக சாதாரண மக்களுக்கு இருந்த தடைகள் பல நீக்கப்படுகிறதே தவிர பயங்கரவாதிகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment