தமிழ் சமூகம் எங்களை ஏற்றுக்கொள்ளுமா என்பதே எமது ஏக்கம். தமிழ் செல்வனின் மனைவி.
சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தொலைக்களம் எனும் குறும்படம் தொடர்பாக இலங்கையிலுள்ள பிரபல ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரின் மனைவி திருமதி ரேகா தமிழ்ச்செல்வன் சனல் 4 வின் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துரைத்துள்ளதுடன், தானும் தனது பிள்ளைகளும் இலங்கை அரசினால் மிகவும் சிறப்பாக பராமரிக்கப்படுவதாகவும், தாம் இலங்கை அரசின் பாதுகாப்பிலிருந்து முற்றாக விடுதலை செய்யப்பட்டால் தமிழ் சமூகம் தங்களை ஏற்றுக்கொள்ளுமா என்பதே தம்முன்னுள்ள பெரிய ஏக்கமெனவும் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்
வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வைத்தியர்கள் யாவரும் வைத்தியசாலைகள் திட்டமிட்டவகையில் தாக்கப்பட்டதென தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துரைத்துள்ளதுடன் , புலிகளின் தலைமையினால் சர்வதேசத்திற்கு தவறான செய்திகளை வழங்க தாம் நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும், சில சந்தர்ப்பங்களில் புலிகள் தாம் தெரிவிக்காத விடயங்களைக்கூட தாம் தெரிவித்தாக புலிகளின் குரல் வானொலியூடாக பரப்புரை செய்ததாகவும் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவிக்கின்றார்.
மேலுமொரு வைத்தியர் கூறுகையில், புலிகள் தங்களை தாம் மக்களின் பாதுகாவலர்கள் எனக்கூறினார்கள், ஆனால் உயிர்தப்ப முனைந்த மக்களைச் சுட்டுக்கொன்றார்கள், இவ்விடயங்களை நான் எனது கண்களால் கண்டேன் என தெரிவிக்கின்றார்.
புலிகளின் சர்வதேச பிரிவுத் தலைவர் கஸ்ரோ வின் சகா
சனல் 4 வானொலியில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் கருத்துக்களுக்கு வலுச்சேர்த்திருக்கும் வாணிகுமார் என்பவர் புலிகளியக்க உறுப்பினர் எனவும், அவர் கஸ்ரோ பிரிவில் இணைந்திருந்தார் எனவும், புலம்பெயர் நாடுகளில் இயங்கும் ரிவைஓ எனப்படுகின்ற இளையோர் அமைப்பின் பெண்கள் பிரிவுக்கான தலைவியாக அவர் செயற்பட்டார் எனவும் கஸ்ரோ தலைமையிலான புலிகளின் சர்வதேச பிரிவில் இயங்கிவந்த பிரபாகரன் எனும் புலி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அதற்கும் அப்பால் வாணிக்குமார் புலிகளியக்கத்தில் ஆயுதப்பயிற்சியை பெற்றிருந்தாகவும், அவர் லண்டனில் சந்தித்திருந்ததோர் விபத்துகாரணமாக முதுகுப்பகுதியில் காயமடைந்திருந்த காரணத்தினால் கடின இராணுவப் பயிற்சியை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் சயனைட் குப்பி, தகடு என்பவற்றை பாவித்திருந்தார் எனவும் குறிப்பிடுகின்றார். மேலும் அவர் சர்வதேச பிரிவில் செயலாற்றும் காரணத்தினால் வெளியிடங்களுக்கு செல்லும் தேவை கருதி வரியுடை உடுத்தவில்லை எனவும் குறிப்பிடுகின்றார்.
பொதுமகன் சார்ள்ஸ்
நான் கிளிநொச்சியில் 34 வருடங்களாக வாழ்கின்றேன். வன்னியில் நடந்த சகல விடங்களையும் நான் என் மனங்களில் பதிவு செய்து கொண்டுள்ளேன். புலிகள் எம்மை மனித கேடயங்களாக வைத்திருந்தார்கள். அவர்களிடமிருந்து மக்கள் தப்ப முயன்ற சம்பவங்கள் ஏராளம் .. ஏராளம். அவ்வாறு தப்ப முயன்ற மனித உயிர்கள் பெறுமதியற்றுப்போயின.
நான் எனது கண்காளல் கண்டேன், ஓர்இரவு 1 மணியளவில் மணல் கட்டுகளை தாண்டி தப்பியோட முனைந்த இரு இளைஞர்களை புலிகள் சுட்டுக்கொன்றனர். அவர்கள் செய்த தவறு யாது. அவர்கள் எந்த குற்றமும் இழைக்காத இளைஞர்கள. தமது உயிரை காக்க முனைந்தது புலிகளின் இராட்சியத்தில் தவறாக பட்டது. சுட்டுக்கொன்றார்கள். மகனை காப்பாற்ற முனைந்த தாயை மகன் முன்னே புலிகள் கைகளை பொல்லுகளால் கதறக்கதற அடித்து உடைத்தார்கள.; இவையாவும் நான் எனது கண்களால் கண்டவை என்கின்றார் சாள்ஸ்.
சூசையின் மனைவி
சத்தியதேவி எனப்படும் நான் புலிகளின் சிறப்புத் தளபதியாகிய சூசையை காதல் திருமணம் செய்து கொண்டேன், இலங்கையிலிருந்து இந்தியா தப்பிச் செல்லும்போது கைதுசெய்யப்பட்டேன். நான் இன்று இலங்கை இராணுவத்தினரால் மிகவும் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றேன். எம்மை அவர்கள் சாதாரண மக்களைப்போன்றே பார்க்கின்றனர் எனத் தெரிவிக்கின்றார்.
தயா மாஸ்ரர்
புலிகளின் ஊடகத்துறை இணைப்பாளரான தாயா மாஸ்ரர் எனப்படுபவர் கூறுகையில், புலிகள் மாற்று இயக்க உறுப்பினர்களை கைது செய்து அவர்களை சிலகாலங்கள் சிறைப்படுத்தியபின்னர் சுட்டுக்கொல்வர். அவ்வாறு சுட்டுக்கொல்லுகின்றபோது புலிகள், இராணுவத்தினர் அணியும் சீருடைகளை அணிந்தே இவ்விடயத்தினை மேற்கொள்வர் என்பதுடன் அச்சம்பவத்தை வீடியோ செய்து ஆவணப்படுத்திய பின்னர் அவற்றை நாம் பல்வேறுபட்ட பரப்புரைகளுக்கு பயன்படுத்துவோம் எனத்தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாது சிங்கள எல்லைக் கிராமங்களிலுள்ள தமிழ் கிராமங்கள் மீது இராணுவத்தினரால் மேற்கொண்டதாக கூறப்படும் தாக்குதல்கள்கூட புலிகளினால் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களேயாகும். புலிகள் இவ்வாறான தமிழ் கிராமங்களைத் தாக்குகின்றபோது இராணுவச் சீருடையணித்து சிறுவர் , வயோதிபர் , பெண்கள் என்ற வேறுபாடு இல்லாது அவர்களை சுட்டுக்கொன்றுவிட்டு அவற்றை http://www.blogger.com/img/blank.gifவீடியோ செய்து எமது ஊடகப்பணிமனையிடம் தருவர் அவற்றை நாம் அரசிற்கு எதிரான பரப்புரைகளுக்கு பயன்படுத்தியுள்ளோம் என்கின்றார்.
இவ்வாறு புலிகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் வீடியோ பதிவினை பார்வையிட இங்கு கிளிக்செய்யவும்.
0 comments :
Post a Comment