கீறீஸ் பூதம் பிடிக்கச் சென்ற த.தே.கூட்டமைப்பினர் அரசின் பின்கதவில்..
நாட்டில் கிறீஸ் பூத விவகாரம் பூதாகரமாக உருவெடுத்திருக்கின்றது. அண்மையில் திருக்கோயில் பிரதேசத்தில் கிறீஸ் பூதம் புகுந்துவிட்டதாக மக்கள் பதட்ட மடைந்ததுடன் அங்கு ஒர் கலவர நிலைமையும் உருவாகியிருந்தது. இச்சம்பவத்தின் பின்னணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே இருந்தனர் எனவும் மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தார்கள் எனவும் 19 கைது செய்யப்பட்டனர் அவர்களில் 7 பேர் பிரதேச சபை உறுப்பினர்களும் ஏனையோர் த.தே.கூ வின் தீவிர ஆதரவாளர்களுமாவர்.
பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள இவர்களில் ஒரு தொகுதியினர் தாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் தவறான முறையில் வழிநடாத்ததப்பட்டதாகவும், இவ்வாறு மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தமைக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறும் அவர்கள் காவல் துறையினரை பின்கதவால் நாடி தம் மீது வழக்கு தாக்கல் செய்யும் பட்சத்தில் அதன் சுமையை தமது குடும்பங்களே சுமக்க நேரிடுமெனவும் தெரிவிக்கும் அதேநேரம் தம்மீது வழக்கு தாக்கல் செய்வதை மீள்பரிசீலனை செய்யுமாறு வேண்டுகின்றனர்.
இவர்கள் இவ்விடயத்தினை பொலிஸாருக்கு தெளிவுபடுத்துவதற்கு அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளர் இனியபாரதியை நாடியுள்ளதாக அறியமுடிகின்றது.
1 comments :
They misled the tamil community for a number of uncounted years,even now misleading them.They've the talent to mesmorize the tamils talking about and do hero worship to their late bogus political heores.The poor people dont know and never realize,because they are being memorized from the start to now.
Post a Comment