Monday, August 15, 2011

நீதிமன்ற உத்தரவைப் புறக்கணித்து சுதர்மன் தொடர்ந்தும் ஐரிஎன் இல் பணியில்.

டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான 1828 தொன் இரும்புத் தொகையை வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்காக சுதர்மன் ரந்தலியகொட குறித்த வர்த்தகரிடமிருந்து 15 லட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், அவரை கைதுசெய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் ஜூலை 19ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ள சுயாதீன தொலைக்காட்சியின் சுதர்மன் ரந்தலியகொட தொடர்ந்தும் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக தெரியவருகிறது.

கைதுசெய்யுமாறு நீதிமன்றத்தினால் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் சுதர்மன் ரந்தலியகொடவை பணிக்கு அமர்த்தியுள்ளமை குறித்து ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் ஆகியோரிடம் கருத்து கேட்டபோது, இவ்வாறான நீதிமன்ற உத்தரவு குறித்து பொலிஸார் தமக்கு அறியத்தரவில்லை எனத் தெரிவித்துள்ளனர்:

No comments:

Post a Comment