Friday, August 26, 2011

யுத்தக்குற்றம் தொடர்பில் உள்நாட்டில் விசாரணை இல்லையேல் சர்வதேச ரீதியாகவாம்.

அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதானது ஜனாதிபதி மகிந்தராஜபக்க்ஷவின் சாதகமான தீர்மானம் என அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் விக்டோரியா நுலண்ட் தெரிவித்துள்ளார். சர்வதேச சட்டத் திட்டங்களுக்கு அமைய இலங்கை செயற்படவேண்டும் அதற்காக அமெரிக்கா இலங்கையைத் தொடர்ந்து வலியுறுத்தும் எனவும் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைகளை உள்நாட்டில் மேற்கொள்ளாத பட்சத்தில், சர்வதேச ரீதியாக அதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவை தொடர்பில் ரொபர்ட் பிளேக் இலங்கையுடன் பேச்சு நடத்துவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இதேநேரம் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 29ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்விஜயத்தின் போது அரசு தரப்பினருடனும் சிவில் சமூக பிரதிநிதிகளுடனும் பல்கலைக்கழக மாணவர்களுடனும் மற்றும் அரசியல் தலைவர்களுடனும் அவர் கலந்துரையாடவுள்ளார்.

ரொபேட் ஓ பிளேக் இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comments :

Anonymous ,  August 27, 2011 at 9:39 AM  

There are strong preachers democracy running up and down,we're ought to oblige them if not the reults would be negative.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com