அவசரகால சட்டத்தை நீக்கியதற்கு ஈ.பி.ஆர்.எல்.எப். நன்றி தெரிவிப்பு
அவசரகால சட்டத்தை நீக்கியமை தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எப். நன்றி தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் அவசரகால சட்டம் காரணமாக பொது மக்கள் மட்டுமன்றி சில கட்சி பிரதிநிதிகள் கூட அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்ததாகவும் அவசரகால சட்டத்தை நீக்கியமை காரணமாக நாட்டில் மீண்டும் ஜனநாயகமும் சுதந்திரமும் நிலை நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
0 comments :
Post a Comment