இலங்கையில் நடைபெற்ற யுத்தம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக கருத்துக்கூற ஐக்கிய நாடுகள் சபை மறுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மார்டின் நெசர்க்கியிடம் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது குறித்த அறிக்கை தொடர்பில் கருத்து கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த மார்டின் நெசர்க்கி, குறித்த அறிக்கை தொடர்பில் உத்தியோகபூர்வமான விபரம் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்
அதேநேரம், போர்க்குற்றம் தொடர்பில் இலங்கையின் உள்ளக பொறுப்புக்கூறல் குறித்து சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக நெசர்க்கி கூறினார்
போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு பரிந்துரைகளை செய்திருக்கிறது
அதில், உள்ளக விசாரணையும் ஒன்றாகும். தமக்கு கிடைத்த தகவலின்படி, இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையானது உள்ளக விசாரணையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment