நகராதிபதி வேட்பாளரின் பெயரை திறந்து வைத்திருக்காவிடின் பதவி விலகுவேன். லால்
எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக தெஹிவளை-கல்கிசை நகராதிபதி வேட்பாளராக முன்னாள் மேயர் சுனேத்திரா ரணசிங்கவின் பெயரை குறிப்பிட்டுள்ளமையை வாபஸ் பெற்று , மேயர் வேட்பாளரின் பெயரை குறிப்பிடாமல் அதனை திறந்த நிலையில் வைத்திருக்குமாறு கட்சித் தலைமையிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ரத்மலானை பகுதி அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மொஹான் லால் கிரேரு நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
எனது கோரிக்கையை கட்சிக்கு அறிவித்துள்ளேன். அது புறக்கணிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் செவ்வாய்க் கிழமை (30) வரை கால அவகாசம் வழங்கியுள்ளேன். அதன் பிறகும் எனது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் ரத்மலானை பகுதி அமைப்பாளர் பதவியிவிருந்து விலகி விடுவேன் என்று அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment