உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கங்கள் விநியோகம்.
எதிர்வரும் அக்டோபர் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள 23 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கங்களை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று நிறைவடைவதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.இதுவரையில் 21 உள்ளூராட்சி மன்றங்களுக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யூ.பி சுமனசிறி தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் கல்முனை மாநகர சபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இன்றைய தினம் விருப்பு இலக்கங்கள் வழங்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.
அதன்படி இதற்கான வர்த்தமானி அறிவித்தலை இன்று செவ்வாய்க் கிழமை நள்ளிரவு வெளியிடுவதற்கு தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த 25 ஆம் திகதி நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment