நாடு பூராகவுமுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் கோத்தா- சந்திப்பு
நாட்டில் கிறீஸ் பூதம் ஏற்படுத்தியுள்ள பதட்டம் தொடர்பாக நாடுபூராகமுள்ள முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பு அமைச்சின் முக்கியஸ்தர்களுக்குமிடையே இன்று நீண்டதோர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது முஸ்லிம் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சற்று முன்னர் நிறைவுற்ற சந்திப்பின் முடிவில் நாட்டின் சகல பகுதிகளிலுமிருந்து வந்திருந்த முஸ்லிம் பிரமுகர்கள் தத்தமது பிரதேசங்களுக்கு சென்று மக்களுக்கு தெளிவுபடுத்துவதாக உறுதியளித்தனர் என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் இலங்கைநெற்றுக்கு தெரிவித்தார்.
0 comments :
Post a Comment