அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொள்கின்றமைக்கு வட கொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்விரு நாட்டுப் படைகளும் இணைந்து நடத்தும் கூட்டு இராணுவப் பயிற்சி ஆரம்பமாகியதுடன் 10 நாட்களுக்கு இப்பயிற்சி நடைபெறவுள்ளது.
பசுபிக் பகுதியில் நடைபெறும் இப்பயிற்சி நடவடிக்கையில் மூவாயிரம் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் உட்பட சுமார் 5 இலட்சத்து 30 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து, வடகொரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்நடவடிக்கை ஏற்றுக் கொள்ளக்கூடியதல்லவெனவும் இது போருக்கான அறிகுறியெனவும் இதனை நிறுத்தவேண்டுமெனவும் எச்சரித்துள்ளது.
இதேவேளை கொரிய தீபகற்பத்தில் போர் உருவாகும் அபாயம் நிலவுவதாகவும் தென்கொரிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment