Saturday, August 20, 2011

பிரிட்டன்: சாதி பாகுபாடு கருதி தம்பதியர் பணி நீக்கம்

பிரிட்டனில் வாழும் இந்திய தம்பதியர் சாதி பாகுபாடு கருதி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள னர். சட்டத்துறையில் பணிபுரிந்த இந்திய வம்சாவளியினரான விஜய் பெக்ராஜ் (32), அவரது மனைவி அமர்தீப்பும் இந்த நவீன உலகத்தில் தங்களுக்கு இழைக் கப்பட்ட கொடுமையை எதிர்த்து அந்த நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

விஜய் பெக்ராஜ் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர், அவரது மனைவி சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர். அவர்கள் அந்நிறுவனத்தில் பணிபுரியும் காலத்தில் ஒருவருக் கொருவர் காதல் வயப்பட்டனர். ஓர் இந்தியருக்குச் சொந்தமான அந்தச் சட்ட நிறுவனத்தின் முதலாளி உயர்ந்த சாதியைச் சேர்ந்தவராம். இவர்கள் இரு வரின் காதல் லீலைகள் பொறுக்க முடியாத அந்த முதலாளி, இவர் களது திருமணம் நடப்பது நல்ல தல்ல என்று கூறி வந்தார். முதலாளி மட்டுமல்ல அங்கு பணி புரிந்த மூத்த ஊழியர் ஒருவரும் அடிக்கடி அந்தப் பெண்ணுக்கு அறிவுரை கூறி வந்தார். தாழ்த் தப்பட்ட ஒருவனைக் கட்டிக் கொண்டு எப்படி சமாளிக்கப் போகிறாய். அவனை மணம் முடிப்பது பற்றி சற்று நிதானமாக யோசி, பின் நல்ல முடிவாக எடு என்று அப்பெண்ணின் மனதை மாற்ற பல முறை முயற்சித்தாக அந்தப் பெண் கூறுகிறார். அந்நிறுவனத்தின் முதலாளி யும் மூத்த ஊழியர் ஒருவரும் அந்தத் தம்பதியரின் காதலின் ஊக்கத்தை குறைக்கும் முயற்சி யில் இயன்றவரை ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் அதையெல்லாம் முறியடித்து அந்தக் காதல் வென்று கல்யாணத்தில் முடிந் தது. இதை அந்த முதலாளியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அந்தத் தம்பதியரை வேலையில் இருந்து நீக்கி விட்டார்.

தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவராகக் கூறப்படும் விஜய் கடந்த ஆண்டே வேலை யில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். விஜய் இந்த நிறுவனத்தில் ஏழாண்டுகள் பணிபுரிந்துள்ளார். அவரது மனைவி தொடர்ந்து அந் நிறுவனத்தின் அனுமதிக்கப்பட் டாலும், வேலையில் பிழிந் தெடுக்கப்பட்டதாலும் கடந்த ஜனவரி மாதம் அந்நிறுவனத்தில் இருந்து விலகியதாகக் கூறினார்.

இப்போது இந்தத் தம்பதியர் அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். பிரிட்டன் வரலாற்றில் இதுபோன்ற வழக்கு விசாரணைக்கு வருவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் இந்தத் தம்பதியரின் சோகக் கதை பிரிட்டனின் த டைம்ஸ் நாளேட் டில் வெளிவந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிலர் இந்தத் தம்பதியரின் வாகனக் கண் ணாடியை தாக்கி உடைத்தாகக் கூறுகின்றனர் இந்தத் தம்பதியர். .

No comments:

Post a Comment