உற்ற நண்பியின் மரணத்தால் அதிர்ச்சியடைந்த யுவதி மரணம்.
தனது உற்ற நண்பியின் மரணத்தால் பெரும் அதிர்ச்சியடைந்து மாரடைப்புக்குள்ளாகி யுவதியொருவர் மரணமடைந்த சம்பவமொன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. லண்டன் பல்கலைக்களகத்தின் ஆக்கக் கலைப்பிரிவின் மாணவியான யஸ்மினா சுகிலியனோ (25வயது) என்பவரே தனது ஆருயிர் தோழியான போர்ரியா ஜோன்ஸின் (23வயது) மறைவால் அதிர்ச்சியடைந்து மரணமடைந்துள்ளார்.
இரு வருடங்களுக்கு முன் நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே யஸ்மினாவுக்கும் போர்ரிமோவுக்குமிடையில் நட்பு ஏற்பட்டது. யஸ்மினா ஏற்கனவே இருதய நோய் பாதிப்புக்குள்ளானவராவார்.
சுரே நகரிலுள்ள செசிங்டன் எனும் இடத்தை சேர்ந்த போர்ரியோவுக்கு அண்மையிலேயே திருமணமாகியிருந்தது. அவர் கடந்த வாரம் நுரையீரல் மாற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சத்திர சிகிச்சை வெற்றி பெறாத நிலையில் அவர் மரணமடைந்தார். இதையறிந்த போர்ரியா பெரும் அதிர்ச்சியடைந்து பெரும் நெஞ்சுவலிக்கள்ளான நிலையில் இரண்டு மணித்தியாலங்களில் உயிரிழந்தார்.
0 comments :
Post a Comment