அவசரகால சட்டம் நீக்கம் - ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
நாட்டில் அமுலில் இருந்த அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையை இனி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் வைத்து இந்த விசேட அறிவிப்பை வெளியிட்டார்.
சற்றுமுன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பாராளுமன்றில் இதுதொடர்பான பிரேரணை ஒன்றை பாராளுமன்றில் முன்வைத்து பேசும்போது நாட்டில் யுத்தம் நிறைவடைந்த நிலையில், இனிவரும் நாட்களில் அவசரகால சட்டம் அவசியமற்றது என கருதுவதாகவும் தொடர்ந்தும் அவசரகாலசட்டத்தை நீடிக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே நாட்டின் நிரந்தர ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில், இனி அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையை முன்வைக்கப் போவதில்லை என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
1971 ம் ஆண்டு இலங்கiயில் இடம்பெற்ற கிளர்ச்சியைத் தொடாந்து அவசரக்காலச் சட்டம் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் அந்த சடட்ம் நீக்கப்பட்ட நிலையியல் பின்னர் 2005ம் ஆண்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது
இலங்கையில் காணப்படும் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசுடனான பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளின் போதும் வலியுறுத்தியது. அத்துடன் யுத்தத்தின் பின் அவசரகாலச்சட்டம் அகற்றப்பட வேண்டும் என சர்வதேச நாடுகள் அழுத்தம் வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
1 comments :
It's a good news of the withdrawal
of long standing emergency law,but the security of the country
should not and must not be a question mark in future.Preference should be given to the safety of the public and public property.
Post a Comment