பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு மரணதண்டனை.
அங்குலானை இருகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டிருந்த அங்குலானை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர, ஏ.பீ.வராவௌ மற்றும் குமுதினி விக்ரமசிங்க ஆகிய நீதியரசர்கள் இத்தீர்ப்பினை இன்று வழங்கினர்.
சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் கான்ஸ்டபில் ஜீ.ஏ.குமாரசிறி, அங்குலானை பொலிஸ் நிலைய முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி நியூட்டன், கான்ஸ்டபில் நிஹால் ஜயரட்ன, சிவில் பாதுகாப்பு படையின் ; ஜனத்பிரிய சேனாரத்ன ஆகிய நால்வருக்கும் இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12ம் திகதி தினேஸ் தரங்க பெனாண்டோ, தனுஸ்க அப்பொன்ஸ் ஆகிய இரு இளைஞர்களையும் கடத்திச் சென்று கொலை செய்ததாக சந்தேகநபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இவர்கள் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதை அடுத்து நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment