(ஜீனைட்.எம்.பஹத்) மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவகத்தின்செயற்திட்டங்களில் பங்குதாரர்களாக பல காலமாக செயற்பட்டு வரும் டயக்கோணியா சுவீடன் நிறுவனத்தின் வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்கள் வாழ்வாதார உதவிக்காக அடையாளம் காணப்பட்டிருந்தன.
இதன் முதற் கட்டமாக மகிழவட்டவான், கற்குடா, வட்டியல்கிராமங்களில் செயற்பட்டு வரும் 37 சிறு குழு உறுப்பினர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் 14 குடும்பங்களுக்கு மீன்பிடி தொழிலுக்குரிய உபகரணங்களும், 23 குடும்பங்களுக்குவிவசாயத்திற்குரிய இரசாயன தெளி கருவி அதற்குரிய உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கரித்தாஸ் எகெட் நிறுவக இயக்குனர் அருட்பணி கிறைட்டன் அவுட்ஸ்கோன்,மட்டக்களப்பு டயக்கோணியா நிறுவன திட்ட உத்தியோகத்தர் முருகவேள், எகெட் நிறுவகநிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் திரு. எஸ். ஓ. ஜெயானந்தன், வாழ்வாதார முகாமையாளர்திரு. பி. கந்தசாமி, திட்ட உத்தியோகத்தர் திரு. பீ. ஏ. செல்லத்துரை, நிதிமுகாமையாளர் திரு. பி. புண்ணியமூர்த்தி மற்றும் ஏனைய நிறுவக உத்தியோகத்தர்களால் வழங்கிவைக்கப்பட்டன.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் ரூபா. 13,000 பெறுமதியான பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது. மொத்தமாக சுமார் நான்கு இலட்சத்து எண்பத்தோராயிரம் ரூபாசெலவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment