நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் மாணவர் தலைவர் தின விழா அண்மையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், போக்குவரத்துப் பிரிவு ஆணையாளர் கே.அரசரட்னம் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக நீர்கொழும்பு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.பிரபா கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மாணவர் தவைர்களின் சத்தியப்பிரமாணம் வழங்கல், சின்னம் சூட்டுதல். கலை நிகழ்ச்சிகள் என்பனவும் மற்றும் அதிபர் என்.கணேசலிங்கம் முதன்மை விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் உரைகளும் இடம் பெற்றன.
குறிபுப் - படங்களில் காணப்படுபவர்கள்.
1. சத்தியப்பிரமாணம் வழங்க தயாராகும் மாணவ தலைவர்கள்
2. சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாணவ தலைவனுக்கு சின்னம் சூட்டுதல் .
3. உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.பிரபா மாணவ தலைவிக்கு சின்னம் சூட்டுதல்
4. செல்வி டிலினிசசிரியன் நிகழ்வில் பரதமாடும்காட்சி.
No comments:
Post a Comment