இந்திய கிறிக்கட்அணிக் கப்டனுக்கு பிரித்தானியா டாக்டர் பட்டம்.
இந்திய கேப்டன் தோனிக்கு மகிழ்ச்சியான விஷயம். உலக கோப்பை வென்ற இவருக்கு, இங்கிலாந்தின் டி மான்ட்போர்டு பல்கலை கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க உள்ளது. சமீபத்தில் நடந்த உலக கோப்பை(50 ஓவர்) தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது.
இதனை கவுரவிக்கும் விதமாக இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க <இங்கிலாந்தின் டி மான்ட்போர்டு பல்கலை கழகம் முடிவு செய்துள்ளது. வரும் 29ம் தேதி இந்தியா, லீசெஸ்டர்ஷயர் அணிகள் மோதும் பயிற்சி போட்டிக்கு பின் இப்பட்டம் வழங்கப்பட உள்ளது.
இதனை வரவேற்ற தொழிலாளர் கட்சியின் எம்.பி., ஹான் கெய்த் கூறுகையில், உலக கோப்பை வென்ற தோனிக்கு, லீசெஸ்டரில் உள்ள மான்ட்போர்டு பல்கலை கழகம் டாக்டர் பட்டம் வழங்க இருப்பதை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். மும்பையில் நடந்த பைனலில், இந்தியா பெற்ற வெற்றி, கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த தருணமாக அமைந்தது. இந்த சாதனைக்கு அங்கீகாரமாக தான் தோனிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுறது. இதற்காக மான்ட்போர்டு பல்கலையை பாராட்டுகிறேன்.
முதல் தர பல்கலை கழகம், <உலகத்தரம் வாய்ந்த கேப்டனை தேர்வு செய்துள்ளது என வர்ணிக்கலாம்,''என்றார்.
சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வி, ஜார்க்கண்ட்டில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் பி.காம் படிப்பை முடிக்க இயலாதது போன்ற சோகத்தில் இருந்த தோனிக்கு, டாக்டர் பட்டம் இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கும்.
0 comments :
Post a Comment