பாகிஸ்தானில் அமெரிக்கப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்- அமெரிக்கத் தூதரகம்
அமெரிக்கப் பிரஜை ஒருவர் பாகிஸ்தானில் லாகுர் நகரில் அமைந்துள்ள தமது வீட்டில் வைத்து ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.கடத்தப்பட்ட அமெரிக்கப் பிரஜை கடந்த 5 வருடங்களாக பாகிஸ்தானில் பணியாற்றி வந்ததுள்ளார் என தெரிவித்துள்ள அமெரிக்கத் தூதரகம் கடத்தப்பட்டவர் தொடர்பான தகவல்களை வெளியிட மறுப்புத் தெரிவித்துள்ளது.
;அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தக் கடத்தல் இடம்பெற்றுள்ளது. எனினும் எந்தவொரு ஆயுதக்குழுக்களும் இதுவரை கடத்தலுக்கு உரிமை கோரவில்லை.
...............................
0 comments :
Post a Comment