குடிசைவாசிகள் அப்புறப்படுத்தப்படுகின்றனாரா? அப்பட்டமான பொய் என்கின்றார் மகிந்தர்
கொழும்பு நகர அபிவிருத்தியின் போது குடிசைவாசிகளை நகரிலிருந்து அகற்றுவதாக சிலர் பிரசாரம் செய்வதில் எந்தவித உண்மையும் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ கூறியுள்ளார். கொழும்பு நகரை அழகுபடுத்துவதற்காக குடிசைகள் அகற்றப்பட்டு அதில் வசித்த மக்களுக்கு கொழும்பு நகரில் வசதிகளுடன் கூடிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நடைபெறவுள்ள உள்ளுரராட்சி சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை நேற்று வெள்ளிக் கிழமை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த போதே ஜனாதிபதி மேற் சொன்னவாறு குறிப்பிட்டார்.
கொழும்பு மாநகர சபையை ஆச்சரியமிகு மாநகர சபையாக மாற்றுவதற்கு எல்லோரும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும் என்று அங்கு ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment