Wednesday, August 31, 2011

என்ட்கவுண்டர் | பாதாள உலகக்குழுத்தலைவர் களனி கங்கையில் குதிச்சிட்டாரம்.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலகத் தலைவரான ' நேவி அசங்க' நேற்று செவ்வாய்க்கிழமை (30) பெலிஸாரிடமிருந்து தப்பியோடுவதற்காக களனி ஆற்றில் பாய்ந்த போது மரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் போன்ற குற்றச் செயல்களை அதிகளவில் மேற்கொண்டதாகக் கருதப்படுபவர் நேவி அசங்க என்ற இந்த பாதாள உலகத் தலைவராவார்.

பனாங்கொட பிரதேசத்தை சேர்ந்தவராகக் கருதப்படும் நேவி அசங்கவின் உண்மைப் பெயர் பொதேஜு என்று கூறப்படுகிறது. இவர் முன்னர் கடற்படையில் பணியாற்றியுள்ளார்.

இவர் கைது செய்யப்பட்டது முதல் இவரை விடுதலை செய்யுமாறு பொலிஸாருக்கு அரசியல் அழுத்தங்கள் இருந்துள்ளது. இவ்விடயத்தில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதிகம் ஆரவம் காட்டியதாகவும் தெரியவந்தது.

கடந்த 10 ஆம் திகதி (10-8-2011) அத்துருகிரிய பொலிஸாரால் கொஸ்வத்தை பிரதேசத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் போது இவர் மேற்கொண்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்கள் தெரிய வந்துள்ளதாக அறிய முடிகிறது.

நேவி அசங்க தன்னால் மறைத்து வைக்கப்பட்டுள்ள ரி56 ரக துப்பாக்கி ஒன்றை பொலிஸாரிடம் காண்பிக்கச் சென்றபோது நேற்று மாலை நவகமுவ பிரதேசத்தில் வைத்து களனி ஆற்றில் குதித்ததாகவும் , இதன் போது உடன் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆற்றில் பாய்ந்து அவரை காப்பாற்ற முயன்றதாகவும் ஆனால் முயற்சி பயனளிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

காயமடைந்த அந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

2003ஆண்டளவில் கடற்படையை விட்டுஒடிய இவர் நேவி றுவன் என்கின்ற மேலுமொருவருடன் இணைந்து பல்வேறு பட்ட குற்றச் செயல்களை செய்து வந்துள்ளார். இவர் பிலியந்தல, நிட்டம்புவ பூட் சிற்றி கொள்ளை, கங்வெல் லக்கி கோல்ட கவுஸ் கொள்ளை, கடகம , நிட்டம்புவ பெற்றோர் நிரப்பு நிலையங்கள் போன்ற கொள்ளைகளுடன் இரு கொலைகளையும் மேற்கொண்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com