Tuesday, August 30, 2011

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் த.தே.கூ உட்பட சகல தமிழ் கட்சிகளும் பங்கு கொள்ளவேண்டும்.

வெறும் பேச்சுவார்த்தைகளை மாத்திரம் முன்னெடுப்பதால் அரசியல் தீர்வு எட்டிவிடாது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சினேகபூர்வமாக கலந்தாலோசித்து தமிழ் மக்களுக்கு சம உரிமைகளை வழங்க அனைத்து கட்சிகளும் பாராழுமன்றத்தில ஒன்றிணைய வேண்டும் என்று சர்வ கட்சிக்குழுவின் தலைவரான அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வு காலத்தின் தேவையாக உள்ளது. இதனை இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அவதானத்துடன் கையாள்;கின்றன எனவே முரண்பாடுகளைத் தவிர்த்து இணக்கப்பாடுகளுடன் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் .

அவர் மேலும் கூறுகையில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த பல வருடம்களாக பேசப்பட்டு வந்தது தற்போது யுத்தம் முடிவடைந்த நிலையில் விரைவான தீர்வை ஏற்படுத்துவதில் அனைத்து தரப்புகளும் வெளிப்படையாக செயற்பட வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரச தரப்பினர் முன்னெடுத்த பேச்சுவார்த்தை தற்போது இடைநடுவே கைவிடப்பட்டுள்ளது. இது நாட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதாக அமையாது. தெரிவுக்குழு ஊடாக தீர்வை ஏற்படுத்துவது சாத்தியமான விடயமாகும்.

எனவே பாராழுமன்ற தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் வெளிப்படையாக செயயற்பட முன் வரவேண்டும் பல தீர்வுத்திட்டம்கள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே வெறுமனே பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்காது தீர்க்கமான முடிவுகள் அரசியல் தீர்வில் எடுக்கப்படவேண்டும் தேசிய அரசியலமைப்பில் 13 வது திருத்தச்சட்டம் உள்ளது அல்லது சர்வ கட்சி குழுவின் தீர்வுத்திட்டம் உள்ளது. இவற்றின் ஊடாக பேச்சுக்களை முன்னெடுத்து விரைவாக தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். கூட்டமைப்பினர் இன்றி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்பது சாத்தியமற்ற விடயமாகும்
என்றார்.

1 comments :

Anonymous ,  August 30, 2011 at 4:58 PM  

If the government is prepared to solve the difficulties of tamil speaking people of Srilanka,it is vitally important to invite all the parties,which are connected to the tamil speaking communities.The party which is now dramatizing the politics among the tamils and which says that they are the only representaive of tamils has a long history of cheating the tamil communities of Srilanka and the drama is no more needed.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com