Saturday, August 27, 2011

கனடா வர்த்தகர்களுக்கு புலிகளின் வர்த்தகக் கப்பல் சேவை

விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் டொமினிக்கன் குடியரசில் இருந்து கனடாவுக்கு பொருட்களை ஏற்றி இறக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் இந்த கப்பல்கள் புலிகளுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களுக்கான பொருட்களையே ஏற்றி, இறக்குவதாக கனடாவில் மாற்று தமிழ் அமைப்புகளின் தகவல்கள் தெரிவிப்பதாக திவயின தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு கப்பல்களும் டொமினிக்கன் குடியரசில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் மாத்திரம் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 627 வர்த்தக நிலையங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இவற்றில், பாபு என்பவர், மிகப்பெரிய உணவகம் ஒன்றை நடத்தி வருவதாக திவயின குறிப்பிட்டுள்ளது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com