Tuesday, August 16, 2011

இலங்கை விவகாரம்: இந்திய பாராளுமன்றில் அமளிதுமளி

இலங்கை அகதிகளின் மீள்குடியேற்றம் உள்ளிட்ட அவர்களது அடிப்படை பிரச்சினைகள் குறித்து இந்திய பாராளுமன்றில் விவாதம் ஆரம்பமாகிய போதும் அதனை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமார் தலைமையில் குறித்த விவாதம் இன்று நண்பகல் 12.05 அளவில் ஆரம்பிக்கப்பட்டது.

விவாதத்தை அதிமுக உறுப்பினர் ரி.ஆர். பாலு ஆரம்பித்து வைத்து உரையாற்ற முற்பட்ட வேளையில் ஆளும் தரப்பினர் உள்ளிட்டோர் கூச்சலிட்டதனால் பாராளுமன்றத்தில் அமளிதுமளி ஏற்பட்டது. இதனையடுத்து சபாநாயகர் மீரா குமார் பாராளுமன்ற நடவடிக்கைகளை நாளை முற்பகல் 11 மணிவரை ஒத்திவைத்துள்ளார்.

இதேவேளை, ஊழலுக்கு எதிராக வலிமையான லோக்பால் மசோதாவை உருவாக்கக்கோரி டெல்லியில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள இருந்த காந்தியவாதி அன்னா ஹசாரே கைது செய்யப்பட்ட விவகாரம் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து முன்னதாக மக்களவை பகல் 11.30 மணி வரையும், மாநிலங்களவை 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment