Monday, August 22, 2011

அவசரகாலச் சட்டம் செப்டம்பர் முதல் நீக்கப்படும் சாத்தியம்.

எதிர்வரும் செப்டம்பர் 8ம் திகதி முதல் இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் அவசரகால சட்டத்தின் கீழ் உள்ள சில சரத்துக்களை பயங்கரவாத தடைச்சட்டத்தில் உள்ளடக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த புதிய சரத்து சேர்ப்பு, செப்டெம்பர் 8ம் திகதிக்கு பின்னர் இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகின்றது.

இதே வேளை உரிய நடைமுறைகளை மேற்கொள்வதற்காக அவசரகால சட்டம் எதிர்வரும் 8ம் திகதி இரண்டு வாரகாலத்துக்கு மாத்திரம் நீடிக்கப்படலாம் என்றும் தெரியவருகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள அவசரகாலச்சட்டம் 2005ம் ஆண்டு முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டமையை அடுத்து மீண்டும் அமுல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. excellent efforts...............
    need democracy........via America
    kadapy....is .a terrorist in the world.....

    ReplyDelete