Tuesday, August 30, 2011

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை வராது மஹிந்த சமரசிங்க

ஜெனிவாவில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 18 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக எந்தவிதமான பிரேரணையும் கொண்டுவரப்படமாட்டாது என நம்புகின்றோம் அவ்வாறு இலங்கைக்கு எதிராக எத்தரப்பாவது பிரேரணை கொண்டுவருமிடத்து அதனை எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம் என்று மனித உரிமைகள் விவகாரத்துக்கு பொறுப்பான பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்

போருக்கு பின்னரான இலங்கையில் அரசாங்கம் வெளிக்காட்டிவரும் முன்னேற்றம்களை பார்க்கும் போது இலங்கைக்கு எதிராக எந்தவிதமான பிரேரணையும் முன்வைக்கப்படமாட்டாது என்பது எமது நம்பிக்கையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் ஜெனீவாவில் இடம்பெறவிருக்கிற சர்வதேச மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் முன்வைக்கப்படுவதான அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளதாகவும் அதற்கு ஆதரவாக இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் செயற்பட காத்திருப்பதாக ஜே.வி.பி. பிரச்சாரச் செயலாளர் ரில்வின் சில்வா எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

1 comments :

Anonymous ,  August 30, 2011 at 5:40 PM  

The government cannot just ignore the comments of mr.Tilvin Sila,but Mr.Tilvin should and must set an example for the unity and prosperity of the country.The country needs absolutely a free atmosphere with all prosperity and peace.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com